Paristamil Navigation Paristamil advert login

Essonne : உதைபந்தாட்ட போட்டியின் போது தாக்குதல்! - ஒருவர் படுகாயம்!

Essonne : உதைபந்தாட்ட போட்டியின் போது தாக்குதல்! - ஒருவர் படுகாயம்!

29 சித்திரை 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 6441


Montgeron (Essonne) நகரில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டி ஒன்று பெரும் கலவரத்தில் சென்று முடிவடைந்துள்ளது. குறித்த நகரைச் சேர்ந்த அணிக்கும், அருகில் இருக்கும் Vigneux-sur-Seine நகரைச் சேர்ந்த அணிக்கும் உதைபந்தாட்ட போட்டி ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. 

போட்டியின் முடிவில் இரு தரப்பு வீரர்களுக்குமிடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதன்போது வீரர் ஒருவர் தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த வீரர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கத்தி அல்லது வாள் போன்ற எதோ ஒன்றினால அவர் தாக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் அப்பகுதி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்