குரங்கம்மை நோய்த் தாக்கம் தொடர்பில் வெளியான தகவல்

17 ஆவணி 2023 வியாழன் 09:30 | பார்வைகள் : 8479
உலகில் கூடுதலாக குரங்கம்மை நோய்த் தாக்கம் பதிவாகும் பத்து நாடுகளின் வரிசை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பத்து நாடுகளின் வரிசையில் கனடாவும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் 89308 குரங்கம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
கனடாவில் இதுவரையில் 1440 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.
குரங்கம்மை நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோரைக் கொண்ட உலக நாடுகளின் வரிசையில் கனடா பத்தாம் இடத்தை வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகில் அதிகளவான குரங்கமை நோய்த் தாக்கம் காணப்படும் நாடாக அமெரிக்கா திகழ்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் பட்டியலிட்டுள்ளது.