புகைப்பழக்கத்தை ஒழிக்க பிரித்தானிய அரசின் அதிரடி முடிவு!
17 ஆவணி 2023 வியாழன் 09:28 | பார்வைகள் : 12293
பிரித்தானியா 2030-க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க உறுதி கொண்டுள்ளது.
பிரித்தானியா நாட்டின் சுகாதார மந்திரி ஸ்டீவ் பார்க்லே இதனை தெரிவித்து இருக்கின்றார்.
பிரித்தானியாவில் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து காணப்படுகின்றது.
இதனால் நாட்டில் ஆண்டுக்கு சுமார் ஐந்து லட்சம் பேர் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் தனிநபருக்கு மட்டுமின்றி அரசாங்கத்துக்கும் சுகாதார செலவுகள் அதிகரித்து வருகின்றன.
இதனை குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன் ஒருபகுதியாக சிகரெட் பாக்கெட்டுகளில் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும், புகைப்பழக்கத்தை கைவிடும்போது ஏற்படும் நன்மைகளையும் குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan