Oneplus பயனர்களுக்கு வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

28 சித்திரை 2024 ஞாயிறு 11:13 | பார்வைகள் : 9586
இந்தியாவில் வாங்க கிடைக்கும் 2 ஸ்மார்ட்போன்கள் தனது கடைசி Software Updateஐ பெறுவதாக Oneplus அறிவித்துள்ளது.
மே 1ஆம் திகதி முதல் ஆயிரக்கணக்கான Oneplus ஸ்டோர்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியானது. இது பயனர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
Oneplus ஸ்மார்ட்போன் பிராண்டின் தீர்க்கப்படாத சிக்கல்கள் காரணமாக, மே 1ஆம் திகதி முதல் Oneplus Deviceகளுக்கான விற்பனையை நிறுத்துவதாக பல மொபைல் Retail chains அறிவித்தன.
இந்த நிலையில், Oneplus 8 மற்றும் Oneplus 8 Pro ஆகிய இரு மொடல்களின் Security Updateகளை நிறுத்துவதாக மற்றொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2020ஆம் ஆண்டில் இவ்விரு ஸ்மார்ட்போன்களும் அறிமுகமானபோது, 4 வருட Security Updates மற்றும் 3 முக்கிய ஆண்ட்ராய்டு OS Update கிடைக்கும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கடைசி Update ஏப்ரல் 2024 ஆண்டராய்டு Security பேட்ச் ஆனது தற்போது வெளியாக தொடங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த Updates இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுக்கு இந்த Latest Update வந்துள்ளதா என்பதை Settings > About device > OxygenOS > Check for Updates வழியாக கைமுறையாகவும் சரிபார்க்கலாம்.
Oneplus நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''OxygenOS 13.1.0.587 வெளியீட்டின் மூலம் Oneplus 8 மற்றும் Oneplus 8 Pro-விற்கான எங்கள் வாழ்க்கை சுழற்சி பராமரிப்பு வாக்குறுதியை நாங்கள் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றியுள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் உங்கள் அனைவரின் ஆதரவிற்கு நன்றி, நாம் கைகோர்த்து நீண்ட தூரம் வந்துள்ளோம்'' என தெரிவித்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025