பாகிஸ்தானில் காதலிக்காக வாங்கிய பர்கரில் கை வைத்த நண்பனுக்கு நேர்ந்த நிலை
27 சித்திரை 2024 சனி 11:43 | பார்வைகள் : 7205
பாகிஸ்தானில் காதலிக்காக வாங்கிய பர்கரில் கைவைத்த நண்பனை இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானை சேர்ந்த டேனியல் என்பவர் தனது காதிலாக ஆசை ஆசையாக வாங்கிய பர்கரில் அவரது நண்பரான அலி கீரியோ என்பவரை சுட்டுக்கொன்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று டேனியல் தன் காதலி ஷாஜியாவை தன்னுடைய வீட்டுக்கு அழைத்திருந்தார்.
அன்று அலி கீரியோவும் தன்னுடைய சகோதரர் அஹ்மருடன் டேனியல் வீட்டுக்கு வந்திருந்தார்.ப்போது, டேனியல் தனக்கும் தனது காதலிக்கும் பர்கர் ஆர்டர் செய்திருந்தார்.
பர்கர் வந்த பிறகு, ஒரு பர்கரிலிருந்து கொஞ்சமாக அலி கீரியோ சாப்பிட்டிருக்கிறார்.
இதனால் கோபமுற்ற டேனியல், தன்னுடைய காதலிக்காக வாங்கியதையா சாப்பிடுகிறாயா என அலி கீரியோவிடம் கோபமடைந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த டேனியல், அங்கிருந்த காவலாளியிடமிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி அலி கீரியோவை சுட்டார்.
இதனால் படுகாயமடைந்த கீரியோ உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள், இந்த கொலைக்கு டேனியலே பொறுப்பு என விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.


























Bons Plans
Annuaire
Scan