விமான விபத்தில் இறந்த ரஷ்ய-வாக்னர் கூலிப்படையின் தலைவர்
 
                    24 ஆவணி 2023 வியாழன் 08:37 | பார்வைகள் : 8670
ரஷ்ய பத்து பேருடன் பயணித்த ரஷ்ய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
அவ்விமானத்தில் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் அவர்களும் இறந்துள்ளதாகத் ரஷ்யாவின் உள்நாட்டு போக்குவரத்து அமைப்புத் தெரிவித்துள்ளது.
மறுபுறம் வாக்னர் தலைவரின் தனிப்பட்ட விமானத்தை ரஷ்யா சுட்டுவீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக செயற்படுபவர்களின் நடவடிக்கை காரணமாக பிரிகோஜின் உயிரிழந்தார் என டெலிகிராமில் பதிவொன்று வெளியாகியுள்ளது.
மொஸ்கோவிற்கு வடமேற்கில் உள்ள வெர் பிராந்தியத்திலேயே குறிித்த விமானவிபத்து இடம்பெற்றுள்ளது.
பிரிகோஜினின் எம்பிரேரர் விமானம் ஏழு பயணிகள் மூன்று விமானபணியாளர்களுடன் மொஸ்கோவிலிருந்து சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு சென்றுகொண்டிருந்தது என யாவின் விமானபோக்குவரத்து அதிகாரி சபை தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட விமானத்தில் 2014 இல் வாக்னர் குழுவை ஆரம்பித்த சிரேஸ்ட தளபதி டிமிட்ரி உட்கினும் பயணித்துள்ளார்.
விமானம் மொஸ்கோவிற்கும் சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கும் இடையில் உள்ள குசேன்கினோ கிராமத்தில் விழுந்து நொருங்கியுள்ளது.
வாக்னர் தலைவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பத்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என இன்டர்பக்ஸ் தெரிவித்துள்ளது.
விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் பொதுமக்கள் இரண்டு சத்தங்களை கேட்டனர் என கிரேஜோன் டெலிகிராம் தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 பொதிகள் அனுப்பும் சேவை
        பொதிகள் அனுப்பும் சேவை         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan