Seine-Saint-Denis : துப்பாக்கிச்சூடு!
29 வைகாசி 2024 புதன் 09:07 | பார்வைகள் : 11428
Livry-Gargan (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் அதிஷ்ட்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் Allée Jean-Coulon பகுதியில் இடம்பெற்றுள்ளது. மகிழுந்து கழுவும் இடம் ஒன்றில் நின்றிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த இருவர், துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதிஷ்டவசமாக இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.
அவரது மகிழுந்தில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.
ஆயுததாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றூள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan