ஒலிம்பிக் ஆரம்ப நாள் நிகழ்வு.. 50,000 இலவச 'பாஸ்' வழங்கிவரும் நகரசபை..!
28 வைகாசி 2024 செவ்வாய் 13:00 | பார்வைகள் : 11517
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வு வரும் ஜூலை 26 ஆம் திகதி பரிசில் இடம்பெற உள்ளது. இந்த நிகழ்வில் பார்வையாளர்களாக கலந்துகொள்ள 50,000 பேருக்கு இலவச அனுமதிச்சீட்டினை (பாஸ்) பரிஸ் நகரசபை வழங்கி வருகிறது.
இந்த ஆரம்ப நாள் நிகழ்வில் 300,000 பேர் வரை பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அவர்கள் விட, 50,000 பேருக்கான இடத்தினை ஒதுக்கி, அதனை இலவசமாகவே நகரசபை வழங்கி வருகிறது.
ஏற்பாட்டாளர்களின் குடும்பத்தினர், விளம்பரதாரர்கள், விளையாட்டில் ஈடுபடும் இளம் வீர - வீராங்கனைகளின் குடும்பத்தினர், பிரமுகர்கள் என ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த 'பாஸ்' வழங்கப்பட்டு வருகிறது.
மின்னஞ்சல் மூலம் இந்த பாஸ் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டு வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan