ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைத் தலைவர்களுடன் உரையாடிய புடின்
28 வைகாசி 2024 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 8657
உக்ரைன் போரில் வெற்றியை உறுதி செய்வது குறித்து, தனது ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைத் தலைவர்கள் முன் ரஷ்ய ஜனாதிபதி புடின் உரையாற்றியுள்ளார்.
எப்போதும் நாம் எதிரியைவிட ஒரு அடி முன்னால் நின்றால் வெற்றி நிச்சயம் என்று புடின் கூறியுள்ளார்.
தனது ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைத் தலைவர்கள் முன் உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி புடின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராணுவத்துக்கான தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், அரசின் தேவையை சரியான நேரத்தில் சந்திப்பதுடன், சொல்லப்போனால் குறித்த நேரத்துக்கு முன்பே தேவையான விடயங்களை தயாரித்து அளிப்பதுடன், அவற்றின் தரமும் சிறப்பாக இருப்பதாக புடின் தெரிவித்தார்.
உக்ரைன் போர் காரணமாக தளவாடங்களின் தேவை அதிகரித்துள்ளதையும் கூறி எச்சரித்த புடின், ஒரு அடி அல்ல.
அரை அடி முன்னால் எடுத்து வைத்தால் கூட, உடனடியாக, அது பல மடங்கு பலனைக் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan