ஐந்து மடங்கு அதிக தொகைக்கு விற்பனையான ஜனாதிபதியின் ஸ்கூட்டர்!
28 வைகாசி 2024 செவ்வாய் 11:00 | பார்வைகள் : 8939
முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்துவின் பிரபலமான ஸ்கூட்டர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஆரம்பத்தொகையாக €10,000 யூரோக்கள் நிர்ணயிக்கப்பட்ட் €20,500 யூரோக்களுக்கு அது விற்பனையானது.
பிரான்சுவா ஒலோந்துவின் குறித்த ஸ்கூட்டர் அனைவராலும் நன்கு அறியப்பட்டதே. Piaggio MP3 125 ரக குறித்த ஸ்கூட்டர், 30,000 கிலோமீற்றருக்கும் அதிகமாக ஓடியுள்ளது. அதன் தற்போதைய சந்தைப் பெறுமதி 1,300 இல் இருந்து 4,000 யூரோக்கள் வரை மட்டுமே. இந்த தொகை கிட்டத்தட்ட ஸ்கூட்டரின் மதிப்பை விட ஐந்து மடங்காகும்.
ஆனால், முன்னாள் ஜனாதிபதியினால் பயன்படுத்தப்பட்ட இந்த ஸ்கூட்டரின் ஆரம்பத்தொகையாக 10,000 யூரோக்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஏலத்தில் குறித்த ஸ்கூட்டர் மொத்தமாக 20,500 யூரோக்களுக்கு விற்பனையானது.


























Bons Plans
Annuaire
Scan