Paristamil Navigation Paristamil advert login

'இந்தியன் 2' கதை இதுவா ?

'இந்தியன் 2' கதை இதுவா ?

28 வைகாசி 2024 செவ்வாய் 06:30 | பார்வைகள் : 4743


ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இப்படம் ஜுலை 12ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் கதை இதுதான் என ஒரு கதை தற்போது சுற்றி வருகிறது. தனது யு டியுப் சேனலில் நாட்டில் நடக்கும் சில முக்கிய ஊழல்களைப் பற்றி வெளியிடுகிறார் சித்தார்த். அதனால், அவருக்கு பிரச்சனைகள் வருகிறது. அவருக்கு ஆதரவாக சேனாபதி கமல்ஹாசன் செயல்படுகிறார். இதுதான் 'இந்தியன் 2' படத்தின் கதையாம். இது உண்மையா, பொய்யா என்பது படம் வந்த பிறகுதான் தெரியும்.

முதல் பாகத்தில் அப்பா சேனாபதி கதாபாத்திரம் உயிரோடு இருக்கிறார். அவர் கதாபாத்திரம்தான் இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறதாம். சேனாபதி கதாபாத்திரத்தின் இளமைக்காலத்தை மையமாக வைத்து 'இந்தியன் 3' உருவாகியிருக்கிறது என்ற தகவலும் உண்டு.

வர்த்தக‌ விளம்பரங்கள்