வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன தெரியுமா?

27 வைகாசி 2024 திங்கள் 14:29 | பார்வைகள் : 4420
மனதுக்கு நெருக்கமான துணையுடன் வாழ்க்கையை பயணிப்பதில் அடி எடுத்து வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது ஆனால் நம் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது சில தவறுகளை செய்யக்கூடாது அவற்றை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
பணத்தைப் பார்க்காதீர்கள்! பணம் தேவை என்பது உண்மைதான். ஆனால், பணம் தான் வாழ்க்கை என்று இல்லை. எனவே, பணத்திற்காக திருமணம் ஒருபோதும் செய்து கொள்ளாதீர்கள். பணக்காரர்களாக இருந்தவர்கள் ஏழையாகலாம்.. ஏழையாக இருந்தவர்கள் பணக்காரர்களாக மாறலாம். எனவே, மனம் நடத்தையை மட்டுமே பாருங்கள்.
மோசமான அறிகுறிகள்: காதல் அழகானது தான். ஆனால், சில மோசமான அறிகுறிகளை புறக்கணிப்பதும் நல்லதல்ல. இந்த அலட்சியம் மிகவும் ஆபத்தானது. இந்த அறிகுறிகள் ஆபத்தான சமக்ஞைகளாகவும் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையை சரியாகப் புரிந்துகொண்டு முடிவெடுப்பது முக்கியம்..
பொருத்தமற்ற நடத்தையை பொறுத்துக் கொள்ளாதீர்கள்: உங்கள் வருங்கால துணை திருமணத்திற்கு முன் உங்களிடம் தவறாக நடந்து கொண்டால், அவரை தொடர்ந்து அலட்சியம் செய்வது நல்லதல்ல. இது எதிர்காலத்திலும் மோசமாக தொடரலாம்.
திருமணம் பிடிக்காதவர்கள்: நீங்கள் தயக்கத்துடன் திருமணத்திற்கு சம்மதித்தவர்களாக இருந்தாலோ அல்லது மனதளவில் திருமணத்திற்கு தயாராக இல்லை என்றாலோ, உங்கள் முடிவை கவனமாக சிந்தியுங்கள். சில சமயங்களில் உங்கள் எதிர்காலத்தில் மோசமான சிக்கலை ஏற்படுத்தும்.
மாற்றத்தின் மாயை: என் துணையை நான் விரும்பியபடி மாற்றிக் கொள்ளலாம் என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால், அது தவறு. நீங்கள் ஒருவரை மாற்ற முயற்சிக்கும்போது உங்களால் அது முடியாது. அது உங்களை மட்டுமின்றி, உங்கள் துணையையும் வாழ்நாள் முழுவதும் காயப்படுத்தும்.
திருமணத்தை கட்டாயப்படுத்தாதீர்கள்: நீங்கள் உங்கள் குடும்ப அழுத்தத்தால் திருமண செய்ய முடிவை ஒருபோதும் எடுக்காதீர்கள். உங்கள் முடிவை நீங்களே எடுங்கள். ஏனெனில், நீங்கள் விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டால், அது உங்களையும் உங்களை நம்பி வந்த துணையையும் பாதிக்கும்.
வாழ்க்கையில் இலக்குகளை பற்றி விவாதியுங்கள்: சில சமயங்களில் வெவ்வேறு இலக்கங்கள் திருமண உறவை துண்டிக்கலாம். உதாரணமாக, வெளிநாட்டில் வசிப்பது, குழந்தையே பெற்றேடுப்பது, வீட்டு கலாச்சார மரபுகள் போன்றவை சில சமயங்களில் பல்வேறு காரணங்களால் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, இந்த உண்மைகளை முன்கூட்டியே விவாதிப்பது நல்லது.
சரியான முடிவை எடுங்கள்: திருமணம் என்பது ஒரு அழகான பந்தம். நல்லிணக்கத்துடன் வாழ்ந்தால் வாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இன்பத்திலும் துன்பத்திலும் உங்களுடன் இருக்கும் துணையே தேர்ந்தெடுங்கள். எனவே, ஒருவருக்கொருவர் வாதித்து கருத்துக்களை பரிமாறி முடிவெடுப்பது நல்லது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025