இந்திய நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை: ராஜ்நாத் உறுதி
26 வைகாசி 2024 ஞாயிறு 15:47 | பார்வைகள் : 6487
இந்தியாவுக்கு சொந்தமான ஒரு இஞ்ச் நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியாக கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளை சீனா கைப்பற்றி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை மத்திய அரசு மறுத்துள்ளது.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவுக்கு சொந்தமான ஒரு இஞ்ச் நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற முறையில் உறுதியாக தெரிவிக்கிறேன்.
இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் இடையில் நல்ல சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும். தற்போது, நான் இந்தக்கட்டத்தில் விவாதிக்க ஆரம்பித்தால், மக்கள் பெருமைப்படுவார்கள். ஆனால், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதால், அந்த விவரங்களை நான் வெளியிட விரும்பவில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan