வரலாற்று சாதனை படைத்த இந்தியத் திரைப்படம்...!

26 வைகாசி 2024 ஞாயிறு 08:19 | பார்வைகள் : 7878
உலகப் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் கடந்த 14 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது.
விழாவில் இந்த ஆண்டு All we imagine as light, santosh, sunflowers, manthan, sister midnight too, retreat, the shameless ஆகிய 7 இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் பாயல் கபாடியா இயக்கிய மலையாள திரைப்படமான All we imagine as light திரைப்படம் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
கடந்த 30 ஆண்டுகளில் “பாம் டி ஓர்” விருதுக்கு போட்டியிட்ட முதல் இந்தியத் திரைப்படமாகவும் இது அமைந்தது. படம் திரையிடப்பட்ட பின்னர் அங்கு வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று 8 நிமிடங்கள் கைதட்டி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, படத்தின் இயக்குனர் பாயல் கபாடியா, நடிகைகள் சாயா கடம், திவ்ய பிரபா, கனி கஸ்ரதி ஆகியோர், கிராண்ட் பிரிக்ஸ் விருதை பெற்றுக்கொண்டனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025