பேருந்தைக் கொளுத்திய ரசிகர்கள்.. 20 பேர் காயம்..!
26 வைகாசி 2024 ஞாயிறு 07:07 | பார்வைகள் : 17693
நேற்று சனிக்கிழமை மாலை பரிஸ் - லியோன் கழகங்களுக்கிடையே Coupe de France இறுதிப் போட்டி இடம்பெற்றது. இந்த போட்டிக்கு சற்று முன்னதாக இரு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது.
பா-து-கலேயில் இருந்து ரசிகர்களுடன் போட்டியைக் காண இரு பேருந்துகள் புறப்பட்டிருந்தன. அதன்போதே லியோன்-பரிஸ் ரசிகர்களிடையே மோதல் வெடித்தது. Fresnes-lès-Montauban பகுதியில் A1 நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்துகள் இரண்டும் கொளுத்தப்பட்டது.
இதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களோடு மோதலை தடுக்க வந்த CRS காவல்துறையினர் மூவரும் காயமடைந்துள்ளனர்.
பத்து பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan