Paristamil Navigation Paristamil advert login

ஒன்றாரியோ மீண்டும் கொவிட் தொற்று...!

ஒன்றாரியோ  மீண்டும் கொவிட் தொற்று...!

23 ஆவணி 2023 புதன் 10:07 | பார்வைகள் : 9452


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொவிட் தொற்றானது உலக நாடுகளின் உயிர்களை காவு கொண்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் ஒன்றாரியோ மாகாணத்தில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

பல மாதங்களாக தொற்று உறுதியாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைவடைந்து சென்ற நிலையில் மீண்டும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுகளிலும் இவ்வாறு பருவ மாற்றங்களின் போது கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு பதிவாகி இருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

தற்பொழுது ஈஜி5 என்னும் ஒமிக்ரோன் திரிபு வகை ஒன்று அதிக அளவு பரவி வருவதாகவும் இது வீரியமான ஓர் கொவிட் திரிபு எனவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நோய் தொற்று பரவக்கூடிய ஆபத்தினை உடையவர்கள் தடுப்பூசிகளை உரிய முறையில் உரிய இடைவேளையில் ஏற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறினும் கடந்த காலங்களைப் போன்று பாரிய ஆபத்துக்கள் கிடையாது என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்