யாழில் வெதுப்பத்தில் உணவு கொள்வனவு செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

25 வைகாசி 2024 சனி 11:33 | பார்வைகள் : 5824
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள வெதுப்பாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையொன்றில் வாங்கிய றோல் ஒன்றினுள் சுமார் 4 இன்ச் அளவு நீளமுடைய கறல் ஏறிய கம்பிதுண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் குறித்த கடையில் 80 ரூபாய் வீதம் 10 றோல்களை கொள்வனவு செய்து, தனது உறவினர் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு றோல்களை பரிமாறி சாப்பிட்ட வேளை றோல் ஒன்றினுள் கம்பி துண்டு காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை றோல்கள் வாங்கிய கடைக்கு அவற்றை விநியோகம் செய்வது , சுன்னாகம் பகுதியில் உள்ள பிரபல வெதுப்பகம் ஆகும். எனவே குறித்த வெதுப்பகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025