ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

23 வைகாசி 2024 வியாழன் 15:35 | பார்வைகள் : 9871
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கும் அந்நாட்டின் உச்ச தலைவர் அலி காமெனியின்(Ali Khamenei) மகனுக்கும் தொடர்பு இருப்பதான இரசிய தகவல்கள் சில ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டு வருவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்தார்.
இப்ராஹிம் ரைசியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை சர்வதேசம் வெளிப்படுத்திவரும் நிலையில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
மேலும், இப்ராஹிம் ரைசி பயணித்த விமானத்தின் பாகங்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அவரின் மரண விசாரணை தொடர்பில் ஈரானிய அரச தரப்பில் எதுவித தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.