Paristamil Navigation Paristamil advert login

 ஜப்பானில் உப்பு சுவையை தரும் மின்சார ஸ்பூன் 

 ஜப்பானில் உப்பு சுவையை தரும் மின்சார ஸ்பூன் 

23 வைகாசி 2024 வியாழன் 13:34 | பார்வைகள் : 1501


ஜப்பான் கண்டுபிடித்த உப்பு சுவையை தரும் மின்சார ஸ்பூன் மூலம் சூப், சாதம், நூடுல்ஸ் போன்ற உணவுகளை சாப்பிட முடியும்.

ஆனால், இந்திய, ஜப்பான் போன்ற நாடுகளில் அதிகளவு உப்பை எடுத்துக்கொள்கின்றனர். 

அதாவது ஒரு நாளுக்கு மட்டுமே 10 கிராம் உப்பு எடுத்துக் கொள்கின்றனர்.

ஜப்பானை சேர்ந்த கிரின் ஹோல்ட்டிங்ஸ் என்ற குளிர்பான நிறுவனமானது உப்பின் பயன்பாட்டை அளவை குறைப்பதற்காக 'Electric Salt Spoon' என்ற ஸ்பூனை கண்டுபிடித்துள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கரண்டியானது 60 கிராம் எடை கொண்டது. 

இதனை நாம் ரீசார்ஜ் செய்யக்கூடிய வகையில் லித்தியம் பேட்டரி மூலம் இயங்குகிறது.

இந்த ஸ்பூன் மூலம் நாம் உணவை எடுத்து சாப்பிடும் போது மெல்லிய மின்புலம் (Electric Field) உருவாகி, அது நாக்கில் உப்பு சுவையை அறியச் செய்யும்.

இதனால், நாம் சாப்பிடும் உணவில் உப்பு இல்லை என்றாலும் உணவில் உப்பு சுவை இருப்பது போன்ற உணர்வு தோன்றும்.

இந்த கரண்டியை கொண்டு சூப், சாதம், நூடுல்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடலாம். இதனால் உப்பின் அளவு கணிசமாக குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்திய மதிப்பில் இந்த Electric Salt Spoon -ன் விலை ரூ.10,540 ஆகும்.   

வர்த்தக‌ விளம்பரங்கள்