Paristamil Navigation Paristamil advert login

'கலகலப்பு 3' படத்தின் ஆச்சரிய தகவல்..!

'கலகலப்பு 3' படத்தின்  ஆச்சரிய தகவல்..!

23 வைகாசி 2024 வியாழன் 13:03 | பார்வைகள் : 519


சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’கலகலப்பு’ மற்றும் ’கலகலப்பு 2’ ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் அவர் ’கலகலப்பு 3’ படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தான் இப்போது கசிந்துள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் உருவான ’அரண்மனை 4’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ’கலகலப்பு’ என்ற திரைப்படம் வெளியானது என்பதும் விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. இதையடுத்து 2018 ஆம் ஆண்டு ’கலகலப்பு 2’ திரைப்படம் வெளியானது என்பது இதில் ஜீவா, ஜெய் , சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா நடித்திருந்தனர்.

இந்த நிலையில் ’கலகலப்பு 3’ திரைப்படம் விரைவில் உருவாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக வாணி போஜன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தை நாயகர்களாக முதல் பாகத்தில் நடித்த விமல் மற்றும் சிவா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் வாணி போஜன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுவதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப தகவல்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்