IPL தொடரில் இருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக் - சோகத்தில் ரசிகர்கள்
23 வைகாசி 2024 வியாழன் 07:36 | பார்வைகள் : 1208
IPL தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றுள்ளதாக நேற்று 22-05-2024 நடந்த போட்டியின் இறுதியில் அவர் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் RCB மற்றும் RR அணிகள் மோதின.
இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் RR அணியானது வெற்றிப்பெற்றது.
இதையடுத்து 2 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் RR மற்றும் SRH அணிகள் மோதவுள்ளன.
22-05-2024 நேற்று நடைபெற்ற தகுதி சுற்றுப் போட்டியில் இருந்து RCB அணியானது வெளியேறிய நிலையில், தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பல ரசிகர்கள் சோகத்தில் இருந்த போதிலும் சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரை கௌரவப்படுத்தி வழியனுப்பியுள்ளனனர்.