Paristamil Navigation Paristamil advert login

வீதியில் பயணித்த கனரக வாகனம் தீப்பிடித்து எரிந்தது... Porte de Bagnolet இல் போக்குவரத்து தடை!

வீதியில் பயணித்த கனரக வாகனம் தீப்பிடித்து எரிந்தது... Porte de Bagnolet இல் போக்குவரத்து தடை!

23 வைகாசி 2024 வியாழன் 07:30 | பார்வைகள் : 2450


சுற்றுவட்ட வீதியில் (périphérique) பயணித்த கனரக வாகனம் ஒன்று இன்று காலை தீப்பிடித்து எரிந்தது. Porte de Bagnolet நோக்கிச் செல்லும் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.

காலை 7.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. NGV எனும் எரிவாயுவில் இயங்கும் குறித்த கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. வாகனத்தில் இருந்த சாரதி இறங்கி தப்பியுள்ளார். பின்னர் தீயணைப்பு துறையினர் அழைக்கப்பட்டனர்.

பெரும் கரும்புகை பலநூறு அடிக்கு எழுந்துள்ளது. அதிஷ்ட்டவசமாக இதில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் சக்கரத்தில் தொற்றிக்கொண்ட தீ, அங்கிருந்தே வாகனத்துக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்