ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி..
23 வைகாசி 2024 வியாழன் 06:58 | பார்வைகள் : 2368
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு ஹீட் ஸ்ட்ரோக் என்ற பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுவது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ’பதான்’ ‘ஜவான்’ மற்றும் ’டங்க்கி’ என்ற மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஷாருக்கான் என்பதும் மூன்றுமே ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது. அதில் ஒரு படமான ‘ஜவான்’ தமிழ் இயக்குனர் அட்லி இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்து ரசித்த ஷாருக்கான் தனது கொல்கத்தா அணி வெற்றி பெற்றதை கொண்டாடினார். அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ஷாருக்கானுக்கு ஹீட் ஸ்ட்ரோக் என்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தியை அடுத்து அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.