Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் கத்தி குத்து தாக்குதல் -  மூவர் பலி

கனடாவில் கத்தி குத்து தாக்குதல் -  மூவர் பலி

22 வைகாசி 2024 புதன் 16:06 | பார்வைகள் : 1378


கனடாவின் மொன்றியாலின் பிலாட்டியு மொன்ட் றோயல் போரோவ் (Montreal's Plateau-Mont-Royal borough) பகுதியில் கத்தி கத்து தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ராச்செல் மற்றும் செயின்ட் அன்ட்ரே வீதிகளுக்கு இடையில் குறைந்தபட்சம் பதினைந்து பேர் மோதிக் கொண்டதாக 911 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

15, 23 மற்றும் 25 வயதான நபர்கள் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த மோதலுடன் தொடர்புடையவர்களே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டில் குறித்த நகரில் இடம்பெற்ற 14ம், 15ம் மற்றும் 16ம் மரணங்கள் இவை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்