Paristamil Navigation Paristamil advert login

அணு ஆயுத போர் பயிற்சியைத் ஆரம்பித்துள்ள  ரஷ்யா

அணு ஆயுத போர் பயிற்சியைத் ஆரம்பித்துள்ள  ரஷ்யா

22 வைகாசி 2024 புதன் 13:14 | பார்வைகள் : 988


உக்ரைன் ரஷ்யப் போரில் தலையிடும் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில்,  ரஷ்யா அணு ஆயுத போர்ப்பயிற்சியைத் துவக்கியுள்ளது.

உக்ரைன் போர் துவங்கிய நாளிலிருந்தே, அணுகுண்டு வீசிவிடுவோம் என தொடர்ந்து புடின் ஆதரவாளர்கள் தொலைக்காட்சியில் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால், இம்முறை, முதன்முறையாக ரஷ்யா அணு ஆயுதப் போர்ப்பயிற்சிகளை நடத்துவது குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளது.

நேற்று, செவ்வாய்க்கிழமை, ரஷ்ய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அணு ஆயுதம் தாங்கிச் செல்லக்கூடிய Kinzhal மற்றும் Iskander ஏவுகணைகள் உட்பட, அணு ஆயுதங்களை எப்படி தயார் செய்வது மற்றும் பயன்படுத்துவது என்பது தொடர்பான செய்முறைப் பயிற்சிகள், போர்ப்பயிற்சியின் முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இம்மாதம், அதாவது, மே மாதம் 6ஆம் திகதி ரஷ்ய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சில குறிப்பிட்ட மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள், ரஷ்யாவை தூண்டும் மற்றும் அச்சுறுத்தும் வகையில் அறிக்கைகள் விட்டுக்கொண்டிருப்பதால், அதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே ரஷ்யா இந்த போர்ப்பயிற்சிகளை மேற்கொள்கின்றது என குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்