Paristamil Navigation Paristamil advert login

■ இன்று முதல் ஐபோன்களிலும் நவிகோ பயண அட்டை..!

■ இன்று முதல் ஐபோன்களிலும் நவிகோ பயண அட்டை..!

21 வைகாசி 2024 செவ்வாய் 11:05 | பார்வைகள் : 3531


ஐபோன் பயனாளர்களின் நீண்டகால கோரிக்கை, இன்று மே 21 ஆம் திகதியுடன் நனவாகிறது. நவிகோ பயண அட்டைகளை தற்போது ஐபோன்களில் இணைத்துக்கொண்டு, அதன் வழியாகவே பயன்படுத்த முடியும்.

திறன்பேசிகளில் உள்ள NFC தொழிற்நுட்பத்தை அப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் மிகவும் கட்டுப்பாடுடன் வைத்திருந்தது. இதனாலேயே அதில் நவிகோ அட்டைகளை இணைத்துக்கொள்ளக்கூடிய வகையில் செயலியை ( App) உருவாக்க Île-de-France Mobilités பெரும் சிரமங்களை எதிர்கொண்டது. தற்போது ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டுக்கொண்டு, NFC வழியாக இயங்கும் செயலியை உருவாக்கி சேவைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இன்னும் சில வாரங்களில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில், பெரும் வரப்பிரசாதமாக இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. 

ஐபோன்கள் பயனாளர்கள் தங்களது தொலைபேசிகளிலும் நவிகோ அட்டையை பதிவேற்றி, ஐபோன் வழியாகவும், அப்பிள் கைக்கடிகாரத்தின் மூலமாகவும் உங்கள் தொடருந்து நிலைய கதவுகளை திறக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்