ஈரானில் 5 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! ஜனாதிபதி ரைசியின் இறுதி ஊர்வலம் எப்போது...?

21 வைகாசி 2024 செவ்வாய் 09:21 | பார்வைகள் : 3988
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, ஈரானில் 5 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மலேக் ரஹ்மதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) ஐந்து நாட்கள் துக்க அனுசரிப்பை அறிவித்துள்ளார்.
கடும் மோசமான வானிலையில் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான 12 மணித்தியாலத்தில் மேல் மீட்புக் குழுவினர் திங்கள்கிழமை காலை தீப்பிடித்த விமான பாகங்களை கண்டுபிடித்தனர்.
இந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.
2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஈரான் வாங்கிய பெல் 212 ஹெலிகாப்டர் இது என்பதை ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
செவ்வாய்க்கிழமை ஈரானின் பல்வேறு நகரங்களில் இறுதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது.
ஜனாதிபதி ராசியின் ராசியின் படிப்பு ஸ்தலமான மத்திய ஈரான் நகரமான கொமிற்கு அவரது உடல் கொண்டு செல்லப்படும்.
பின்னர் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு உடல்கள் கொண்டு வரப்படும்.
அங்கு, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெய்னி பொது இறுதி சடங்கில் பங்கேற்று பிரார்த்தனைகளுக்கு தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
