செவ்வாய் கிரகத்திற்கு 2 மாதங்களில் செல்லும் ரொக்கெட் - NASA அறிவிப்பு

21 வைகாசி 2024 செவ்வாய் 09:13 | பார்வைகள் : 6823
இரண்டு ஆண்டுகள் எடுக்கும் செவ்வாய் கிரக பயணத்தை இரண்டே மாதங்களாக குறிக்கும் புதிய ரொக்கெட் ஒன்றை NASA தயாரிக்கிறது.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் மிகவும் கடினமான மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் திட்டமாக உள்ளது. ஏனெனில், அவ்வளவு தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு விரைவில் செல்ல முடியாது.
செவ்வாய் கிரகத்திற்கான புதிய வகை போக்குவரத்து அமைப்பை தயாரிப்பதில் NASA ஈடுபட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் தூரத்தை மிகக் குறுகிய காலத்தில் கடக்க முடியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையிலான தூரம் மாறிக்கொண்டே இருக்கிறது. இன்றைய தொழில்நுட்பத்தில் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை அடைய குறைந்தது 22 முதல் 24 மாதங்கள் அல்லது 2 ஆண்டுகள் ஆகும்.
எதிர்கால ரொக்கெட்டுக்கான திட்டத்தை நாசா தயாரித்து வருகிறது, அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது. இதன்படி இரண்டு மாதங்களில் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை ரொக்கெட் சென்றடையும்.
இந்த ரொக்கெட்டின் பெயர் பல்ஸ்டு பிளாஸ்மா ரொக்கெட் (Pulsed Plasma Rocket/PPR). இந்த ரொக்கெட்டில் தீவிரமாக வேலை செய்ய Howe Industries நிறுவனத்திற்கு நாசா நிதியுதவி அளித்துள்ளது.
நாசாவின் கூற்றுப்படி, இந்த ரொக்கெட்டின் உந்துவிசை அமைப்பு மிகவும் சிறப்பானது மற்றும் அதிநவீனமானது. இது high specific impulse அல்லது Isp மூலம் பறக்கிறது. இது அதன் இயந்திரத்தை இயக்குகிறது.
இதன்மூலம், இரண்டு மாதங்களில் செவ்வாய் கிரகத்திற்கு சரக்கு மற்றும் விண்வெளி வீரர்களை அனுப்ப முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது. தற்போது இந்த கான்செப்ட்டில் வேலை செய்து வருகிறது.
PPR-இல் அணுக்கரு இணைவு சக்தி அமைப்பு நிறுவப்படும். அதன் மூலம் ரொக்கெட் சக்தி பெறுகிறது. இதில் அணுக்கரு பிளவு நடைபெறுகிறது. ஒரு அணுவின் பிளவு மூலம் பாரிய ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் ரொக்கெட் வேகமாக நகரும்.
பல வகையான ரொக்கெட்டுகளுடன் ஒப்பிடுகையில், PPR சிறியது, எளிமையானது மற்றும் மலிவானது.
இந்த ரொக்கெட் சிறியதாக இருந்தாலும், கனரக விண்கலங்களை ஆழமாக விண்வெளிக்கு அனுப்பும் திறன் கொண்டது. விண்வெளி வீரர்கள் விண்மீன் காஸ்மிக் கதிர்களைத் தவிர்க்க அனுமதிக்கும் தொழில்நுட்பத்தை இது கொண்டுள்ளது. இதன் மூலம் விண்வெளி வீரர்கள் நீண்ட நேரம் விண்வெளியில் பயணிக்க முடியும்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025