தோனியின் ஓய்வு குறித்து CSK அதிகாரிகள் வெளிப்படை
21 வைகாசி 2024 செவ்வாய் 08:59 | பார்வைகள் : 7054
ஓய்வு குறித்து CSK அணி நிர்வாகத்திடம் தோனி இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்று அதிகாரிகள் தரப்பு வெளிப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மூத்த CSK அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், முகாமில் இருந்து முதல் நபராக தோனி சொந்த ஊருக்கு கிளம்பிவிட்டார் என்றும், பெங்களூரு அணியுடனான முடிவு அவர் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
CSK அணியில் தோனியின் எதிர்காலம் தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தோனியும் இதுவரை தமது ஓய்வு குறித்து அணி நிர்வாகத்திடம் கலந்துபேசவில்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சில மாதங்கள் அவகாசம் கேட்டிருப்பதாகவும், அதன் பின்னர் அறிவிக்கலாம் என்றும் தோனி சூசகமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தோனி தற்போதும் உடற்தகுதியுடனே இருப்பதாகவும், அதுவே அவரது சிறப்பு என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் Impact Player என்ற விதி அமுலில் இருக்கும் மட்டும் தோனி சென்னை அணியில் தொடர்வார் என்றும், அது நீக்கப்பட்டால் அவர் அணியில் நீடிப்பது கடினம் என்றும் கூறுகின்றனர். இருப்பினும் ஓய்வு குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டியர் தோனி மட்டுமே என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan