Paristamil Navigation Paristamil advert login

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை குறித்து சுசித்ரா பதிலால் வெடித்த சர்ச்சை…

விஜய் ஆண்டனியின் மகள்  தற்கொலை குறித்து சுசித்ரா பதிலால் வெடித்த சர்ச்சை…

19 வைகாசி 2024 ஞாயிறு 13:19 | பார்வைகள் : 2526


சுசி லீக்ஸ் மூலம், பிரபல நடிகர் நடிகைகளின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் புயலை கிளப்பி வருபவர் சுசித்ரா. இதைத் தொடர்ந்து மன அழுத்தத்திற்காக இவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடினார்.  இவர் மூலம் ஏராளமான கான்ட்ரவர்ஸி கன்டென்ட் கிடைக்கும் என பலர் எதிர்பார்த்த நிலையில், எல்லாருடைய எதிர்பார்ப்பும் புஸ்வானமாய் போனது.

தற்போது யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி அதில் பல பகீர் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் சுசி லீக்ஸ் குறித்து பேசி இருந்த சுசித்ரா, அவை அனைத்தும் பிராங்க் செய்வதற்காக சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள் என்றும், இதனால் நான்தான் பாதிக்கப்பட்டேன். இதற்கு முக்கிய காரணம், தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் என்று கூறி இருந்தார் சுசித்ரா.

இந்த கூட்டணியில் அனிருத், த்ரிஷா, போன்ற பிரபலங்களுக்கும் தொடர்புள்ளதாக கூறியிருந்தார். சுசி லீக்சில் இடம் பெற்ற புகைப்படங்கள் அனைத்தும் அந்த நடிகைகளே அனுப்பியது என தெரிவித்தார்.

பயில்வான் ரங்கநாதன் கார்த்திக் குமார் மற்றும் தனுஷிடம் பணம் பெற்று கொண்டு தன்னை பற்றி தொடர்ந்து விமர்சித்து வந்ததாக கூறிய சுசி, ஒரு கட்டத்தில் மிகவும் கோவமாக மாறி பயில்வானை செத்துப்போயிடு, நீயே தற்கொலை பண்ணி செத்து போயிடு, இல்லைனா உன்னை அடிச்சே கொன்று விடுவார்கள் என பேட்டியில் நேரடியாக தாக்கி பேசியது, இவர் சாதாரணமாக தான் இருக்கிறாரா அல்லது வேறு ஏதும் இவருக்கு பிரச்சனை உள்ளதா? என பார்ப்பவர்களே யோசிக்க வைத்தது.

சுசியின் ஓரின சேர்க்கையாளர் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு கார்த்திக் குமார் ஒருபுறம் பதிலளிக்க, பல்வான் ரங்கநாதனும் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல் தன்னுடைய புதிய வாழ்க்கை குறித்தும், கணவர் குறித்தும், மாமியார் என அனைவரையும் பற்றிய தகவல்களையும் சுசித்ரா இந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

முதல் பேட்டியின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், மற்றொரு பேட்டியில்...  இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் கடந்த செப்டம்பர் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இது குறித்து பேசி மீண்டும் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
விஜய் ஆண்டனி திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னை மிகவும் ஸ்டைலாக மாற்றிக் கொண்டார். கவர்ச்சியான தோற்றத்தில் இருக்கிறார். இதே போல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தன்னுடைய தோற்றத்தையும் மாற்ற விரும்பினார் மீரா. இதனை விஜய் ஆண்டனி இடமும் பலமுறை கூறியுள்ளார்.

மீரா கேட்கும் போதெல்லாம் விஜய் ஆண்டனி ஒரு சில நாடுகளின் பெயர்களை சொல்லி, அங்கு கண்டிப்பாக கூட்டி சென்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விடுவதாக சமாதானம் செய்துள்ளார். 18 வயது கூட நிரம்பாத நிலையில் பலமுறை இது குறித்து மீரா தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததால், கோபத்தில் ஒரு நாள் விஜய் ஆண்டனி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தூக்கி எறிந்து, பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்ய  முடியாது என கோபமாக பேசிவிட்டு சென்றாராம். விஜய் ஆண்டனியின் பேச்சால் மனம் நொந்து போன மீரா தற்கொலை செய்து கொண்டதாக சுசித்ரா இந்த பேட்டியில் கூறியுள்ளார். சுசித்ரா பேசி வரும் பல தகவல்கள் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கும் நிலையில், இது குறித்து விஜய் ஆண்டனி தரப்பில் இருந்து எந்த மாதிரியான பதில் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்