நயன்தாரா ஜாதகத்தில் தோஷமா?
19 வைகாசி 2024 ஞாயிறு 09:08 | பார்வைகள் : 6692
சமீபகாலமாக நயன்தாரா கணவருடன் சேர்ந்து சிறப்பு பூஜை செய்து வருகிறார். தொடர்ந்து பல கோவில்களுக்கு சென்று வரும் நிலையில்.. அவரின்விசேஷ பூஜைகளுக்கு என்ன காரணம்..? நயன்தாராவின் ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் உள்ளதா..? என யூகங்கள் அடிப்படையில் பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. அதுபற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தென்னிந்திய திரையுலகில் 40 வயதை எட்டிய பின்னரும்... தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, கடந்த ஆண்டு பாலிவுட் திரையுலகிலும் இறங்கி கலக்கினார். மேலும் தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அசைக்க முடியாத இடத்தை கைப்பற்றியுள்ள இவர் பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
பாலிவுட் படத்தில், நடிகர் கிங் காங் ஜோடியாக நடித்த ஜவான் படம் சுமார் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதால், இவரை அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் நடிக்க வைக்க ஒருபுறம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு முதல் அதிகபட்சமாக 5 முதல் 6 கோடி வரை மட்டுமே சம்பளமாக பெற்ற நயன்தாரா... 'ஜவான்' படத்தின் வெற்றிக்கு பின்னர் தன்னுடைய சம்பளத்தை 10 கோடியாக நிர்ணயம் செய்து கறாராக கேட்பதாக கூறப்படுகிறது.
நடிப்பை தாண்டி பல்வேறு பிஸ்னஸில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா... வேலை விஷயத்தில் எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும், தன்னுடைய இரட்டை குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரம் செலவிடவும் தவறுவது இல்லை.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, நயன்தாரா பல்வேறு கோவில்களுக்கு சென்று வந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும் இதுகுறித்த ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. அதாவது நயன்தாராவின் ஜாதகத்தில் ஏற்கனவே சில தோஷங்கள் இருந்ததன் காரணமாகவே பல்வேறு பரிகாரங்கள் செய்து திருமணம் செய்துகொண்டார். இந்த தோஷத்தின் தாக்கம் கணவருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த கூடாது என்பதற்காகவே இப்போது விசேஷ பூஜைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா அல்லது எப்போது போல் சாதாரணமாகவே இவர்கள் கோவிலுக்கு சென்றார்களா? என்பது தெரியவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan