Paristamil Navigation Paristamil advert login

Sevran : இருவர் சுட்டுக்கொலை.. ஒருவர் கைது!

Sevran : இருவர் சுட்டுக்கொலை..  ஒருவர் கைது!

18 வைகாசி 2024 சனி 13:40 | பார்வைகள் : 6831


இம்மாத ஆரம்பத்தில், வீதியில் வைத்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் பிரதான குற்றவாளியை Sevran நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Bobigny நகரில் உள்ள அல்ஜீரிய நாட்டு ஆலோசனை மையத்தின் அருகே கடந்த 5 ஆம் திகதி மாலை 4.30 மணி அளவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இதில் இருவர் கொல்லப்பட்டிருந்தனர். ஆயுததாரி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியிருந்தார்.

இந்நிலையில், 49 வயதுடைய குறித்த ஆயுததாரியை Sevran நகரில் வைத்து கைது செய்துள்ளனர்.  மே 16 ஆம் திகதி வியாழக்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்