Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : மாணவன் மீது தாக்குதல்! - சிதைக்கப்பட்ட முகம்..

பரிஸ் : மாணவன் மீது தாக்குதல்! - சிதைக்கப்பட்ட முகம்..

17 வைகாசி 2024 வெள்ளி 16:00 | பார்வைகள் : 13876


பரிசில் பாடசாலை மாணவன் ஒருவர் தாக்கப்பட்டதில் அவரது முகம் சிதைவடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Moulins-des-Prés நடுத்தர பாடசாலையில் இச்சம்பவம் இன்று மே 17, வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. 13 வயதுடைய மாணவன் ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். பேஸ்போல் விளையாடும் மட்டை ஒன்றினால் சக மாணவன் தாக்கியுள்ளார். முகத்தில் தாக்கப்பட்டதில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு முகம் சிதைந்துள்ளது.

உயிருக்காபத்தான அவசர நிலையில் குறித்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Necker (15 ஆம் வட்டாரம், பரிஸ்) சிறுவர்களான சிறப்பு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாடசாலைகள் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. முன்னதாக கடந்த மார்ச் 4 ஆம் திகதி பரிஸ் 4 ஆம் வட்டாரத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலும் 16 வயதுடைய மாணவன் ஒருவர் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்