Dugny : சிறையில் இருந்து விடுதலையானவர் துப்பாக்கிச்சூட்டில் பலி!
17 வைகாசி 2024 வெள்ளி 09:58 | பார்வைகள் : 9847
Dugny (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இத்துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
38 வயதுடைய Mehdi Boulenouane என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார். போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் மிக முக்கிய குற்றவாளியான அவர், Grenoble (Isère) நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கியிருந்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டு இவ்வருட தொடக்கத்தில் விடுதலையாகியிருந்தார். எவ்வாறாயினும் அவர் இலத்திரனியல் காப்பு மூலம் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பிற்பகல் Dugny நகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார
ஆயுததாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். கொல்லப்பட்ட நபரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan