கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்!

17 வைகாசி 2024 வெள்ளி 09:53 | பார்வைகள் : 9373
கையில் மாவுக்கட்டுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட வீடியோ ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.பிரான்சில் 77வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. கடந்த மே 14ம் தேதி தொடங்கிய இந்த விழாவில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு ரெட் கார்ப்பெட்டை அலங்கரித்து வருகின்றனர். இதில் வருடா வருடம் நடிகை ஐஸ்வர்யா ராயும் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் அணியும் வித்தியாசமான உடைகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும்.
இந்த வருடமும் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன் தினம் இரவு மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார் ஐஸ்வர்யா ராய். கையில் கட்டுடன் தனது மகள் ஆராத்யா உதவியுடன் சென்ற ஐஸ்வர்யா ராயைப் பார்த்த ரசிகர்கள் பதறினர். இது சிறு காயம் தான் என ஐஸ்வர்யா தரப்பு ரசிகர்களை ஆறுதல் படுத்தியது.
இன்று கையில் கட்டுடனேயே ரெட் கார்ப்பெட்டில் கலந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். கருப்பு நிறத்திலான நீண்ட கவுனில் வெள்ளை நிற பஃப் வைத்த கையுடன் நடந்து வந்திருக்கிறார் ஐஸ்வர்யா. ரெட் கார்ப்பெட்டில் படியேறி கட்டுப் போட்ட கையில் சலாம் வைத்தவரைப் பார்த்து இணையத்தில் ரசிகர்கள் ஆர்பரித்து வருகின்றனர்.
இந்த வருடம் ரெட் கார்ப்பட்டிலேயே அழகி ஐஸ்வர்யா தான் என்றும், கையில் காயம் இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது, ஐஸ்வர்யா ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார் என்றும் கூறி வருகின்றனர். கனமான அந்த நீண்ட உடையணிந்து ரெட் கார்ப்பெட்டில் ஐஸ்வர்யா நடப்பதற்கு சிரமப்படுவது வெளிப்படையாகத் தெரிந்தாலும் முகத்தில் புன்னகையுடன் இந்த வருடமும் தவறாமல் கேன்ஸ் ரெட்கார்ப்பெட்டை அலங்கரித்திருக்கிறார் உலக அழகி.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1