Paristamil Navigation Paristamil advert login

புதிய ஐபேட்  விளம்பரத்திற்கு மன்னிப்பு கோரிய ஆப்பிள் நிறுவனம்

புதிய ஐபேட்  விளம்பரத்திற்கு மன்னிப்பு கோரிய ஆப்பிள் நிறுவனம்

17 வைகாசி 2024 வெள்ளி 08:58 | பார்வைகள் : 4819


ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் (ipad) விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பில் ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள குறித்த விளம்பரத்தில் இசைக் கருவிகள், கலைப்படைப்புகள், நூல்கள் போன்றவை நொறுக்கப்படுமாறு அமைந்துள்ளது.

மனிதர்கள் உருவாக்கிய படைப்புகள் நொறுங்குவதை விளம்பரம் தத்ரூபமாகக் காட்டியதுடன் புத்தாக்கத்தைக் கொண்டாடுவதே விளம்பரத்தின் குறிக்கோள் என ஆப்பிள் கூறியது.

இந்நிலையில் விளம்பரமானது சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விளம்பரத்தைத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்புச் செய்யதிட்டமிட்டுள்ள நிலையில் அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்