Paristamil Navigation Paristamil advert login

கொட்டாவி விட்டதால் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை...

கொட்டாவி விட்டதால் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை...

16 வைகாசி 2024 வியாழன் 16:05 | பார்வைகள் : 7969


அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொட்டாவி விட்டதால் தாடை ஒட்டிக்கொண்டு வாயை மூட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ஜென்னா சினாட்ரா என்ற 21 வயது இளம்பெண் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 

அதில், தனக்கு நேர்ந்த வேதனையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

அதில்  அவரது தாடை திறந்த நிலையில் இருப்பதும், அதற்காக அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை நாடி சிகிச்சை எடுத்துக்கொண்டதை பற்றி விளக்கும் காட்சிகளும் உள்ளது.

இது எப்படி நடந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை. கொட்டாவியின் தீவிரம் காரணமாக எனது தாடை அப்படியே பிடித்துக்கொண்டது. 

இதனால் என்னால் வாய் பேச முடியாமல் தவிப்பிற்குள்ளானேன்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை நாடினேன். பின்னர் எக்ஸ்ரே எடுத்து உரிய சிகிச்சைகளை அளித்த பின்னரே சரியானது என அவர் கூறி உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்