நடிகை அனுஸ்காவிற்கு விரைவில் திருமணம் !
16 வைகாசி 2024 வியாழன் 13:10 | பார்வைகள் : 7073
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் நடிகை அனுஷ்கா செட்டி.தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில்,அதிக வெற்றித் திரைப்படங்களில் நடித்து, முன்னணி நடிகையாகத் திகழும் இவர்,கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அருந்ததி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
சினிமாவிற்கு வந்த ஆரம்பத்திலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடித்ததோடு அதில் வெற்றியும் கண்டிருந்தார்.
நடிகை அனுஷ்கா பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகியிருந்த நிலையில், தற்போது 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி" என்ற திரைப்படம் மூலமாக மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்திருக்கின்றார்.
தற்போது இவர் பற்றிய ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.அதாவது 42 வயதாகும் அனுஷ்கா,கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவருமென எதிர்பார்க்கப்படும் நிலையில்,நடிகை அனுஷ்காவிற்கு இரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan