Paristamil Navigation Paristamil advert login

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி

21 ஆவணி 2023 திங்கள் 10:50 | பார்வைகள் : 6029


ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்தை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 30ம் தேதி தொடங்கவுள்ளது.

இத்தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அவர்களது அணிவீரர்களை அறிவித்துள்ள நிலையில், இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுபவம் மற்றும் இளம்வீரர்கள் கலந்த கலவை அணியாக அறிவிக்கப்பட்டுள்ள அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஓய்வில் இருந்த மிடில் ஆடர் வீரர்களான கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரோகித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, சுப்மான் கில்,ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா,

சஞ்சு சாம்சன் ஆசிய கோப்பைக்கு பேக்-அப் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்