கனடாவில் வாகனம் கொள்வனவு செய்பவர்களுக்கான மகிழ்ச்சி தகவல்

16 வைகாசி 2024 வியாழன் 08:36 | பார்வைகள் : 7089
கனடாவில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வாகனங்களின் விலைகள் உயர்வடைந்து சென்ற அதே வேலை சந்தைக்கு வாகனங்கள் நிரம்பல் செய்யப்படுவதிலும் நெருக்கடி நிலைமை காணப்பட்டது.
எனினும் இந்த ஆண்டில் கனடிய வாகன சந்தைக்கு கூடுதல் எண்ணிக்கையில் வாகனங்கள் நிரம்பல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் வாகன விநியோக சங்கிலி பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கி இருந்தது.
இதனால் புதிய வாகனங்களை கொல்வனவு செய்வதில் வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிட்டிருந்தது.
சில வாடிக்கையாளர்கள் புதிய வாகனம் ஒன்றை கொல்வனவு செய்வதற்காக பல மாதங்கள் காத்திருக்க நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்தையில் போதிய அளவு வாகனங்கள் நிரம்பல் செய்யப்படாத காரணத்தினால் வாகனங்களின் விலைகளும் தொடர்ச்சியாக அதிகரித்து இருந்தது.
எவ்வாறு எனினும் இந்த ஆண்டில் வாகனங்களுக்கான நிரம்பல் வழமைக்கு திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வாகனங்களின் விலைகளிலும் மாற்றம் ஏற்படலாம் என நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
சில வகை வாகனங்களுக்கு விலை விலை கழிவுகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வாகன உதிரி பாகங்களுக்கு நிலவிய தட்டுப்பாடு வாகனங்களை விநியோகம் செய்வதில் இருந்த காலதாமதம் போன்ற காரணிகளால் கடந்த காலங்களில் வாகன விலைகள் உயர்வடைந்து காணப்பட்டது.