ஒரே நேரத்தில் 'இந்தியன் 2' 'இந்தியன் 3' ஷங்கரின் அதிரடி..

16 வைகாசி 2024 வியாழன் 07:06 | பார்வைகள் : 7918
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், உருவாகி இருக்கும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அனேகமாக இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியாகும் என்றும் ஜூலை இரண்டாவது வாரம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது ’இந்தியன் 3’திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது ’இந்தியன் 2’ மற்றும் ’இந்தியன் 3’ ஆகிய இரண்டு படங்களின் ட்ரெய்லர்கள் எடிட் செய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்தை வெளியிடும் திரையரங்குகளில் 'இந்தியன் 3’ படத்தின் டிரைலரை இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் திரையுலக வரலாற்றில் இந்த புதுமையை செய்ய ஷங்கர் வேற லெவலில் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே திரையரங்குகளில் ’இந்தியன் 2’ படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்களுக்கு ’இந்தியன் 3’ படத்தின் டிரைலரையும் பார்க்கும் வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3