யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்?
15 வைகாசி 2024 புதன் 14:13 | பார்வைகள் : 7815
நடிகர் ரியோ ராஜ் சின்னத்திரையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழில் பிளான் பண்ணி பண்ணணும், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்கள் பெரிதளவில் வெற்றியடையவில்லை. கடைசியாக ரியோ ராஜ் நடித்து வெளிவந்த 'ஜோ' திரைப்படம் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றி பெற்றது.
தற்போது ரியோ ராஜ் பிஸியாக மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறார். மேலும், இதில் கதாநாயகியாக மாளவிகா மனோஜ் மற்றும் பிரீத்தி அஸ்ரானி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan