Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியர்களை மீண்டும் அச்சுறுத்தும் புதிய வைரஸ் திரிபு

பிரித்தானியர்களை மீண்டும் அச்சுறுத்தும் புதிய வைரஸ்  திரிபு

21 ஆவணி 2023 திங்கள் 10:33 | பார்வைகள் : 8228


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று நோயானது முழு உலக நாடுகளையும் ஆக்கிரமித்து வந்துள்ளது.

தற்பொழுது உலகில் மீண்டும் கொரோனா வைரஸ் மாறுபாடு பரவ ஆரம்பித்துள்ளது.

அதன் திரிபானது பிரித்தானியாவிலும் 20.08.2023 இல்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய புதிய கொரோனா வைரஸினுடைய மாறுபாடானது பீ.ஏ.2.86 அல்லது பைரோலா என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய வைரஸின் தாக்கம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வைரஸானது தனது புரத அமைப்பில் 30 மாறுபாடுகளைக் கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக வேகமாக பரவக்கூடும்.

ஏற்கனவே வழங்கப்பட்ட தடுப்பூசியின் தாக்கத்தை தாண்டி தொற்றை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்