Paristamil Navigation Paristamil advert login

ரபா நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட  பாலஸ்தீனியர்கள்

ரபா நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட  பாலஸ்தீனியர்கள்

15 வைகாசி 2024 புதன் 13:17 | பார்வைகள் : 9030


கடந்த வாரம் மட்டும் ரபா நகரில் இருந்து 4 லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டதாக ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரால், காசாமுனை பேரழிவை சந்தித்துள்ளது.காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

பாலஸ்தீனியர்களின் கடைசி புகலிடமாக உள்ள ரபாவில் இருந்து வெளியேறுமாறு அவர்களை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

இதையடுத்து ரபாவில் இருந்து அவர்கள் வெளியேறி வரும் நிலையில், கடந்த வாரத்தில் குறைந்தது 4.50 லட்சம் பாலஸ்தீனியர்கள் ரபா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்