விடுதலை 2' படத்தின் தாமதத்திற்கு காரணம் என்ன?
15 வைகாசி 2024 புதன் 07:13 | பார்வைகள் : 14415
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான நிலையில் இந்த படம் வெளியான ஒரு சில மாதங்களில் ’விடுதலை 2’ வெளியாகும் என்றும் 'விடுதலை 2’படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் ’விடுதலை’ படம் வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் இன்னும் ’விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை.
சமீபத்தில் 'விடுதலை 2’படம் குறித்து பேட்டியளித்த இயக்குனர் வெற்றிமாறன் இன்னும் 20 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற வேண்டியது உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது 'விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆவதற்கு விஜய் சேதுபதி தான் காரணம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன், விஜய் சேதுபதியிடம் 20 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் கேட்டிருந்ததாகவும் ஆனால் விஜய் சேதுபதி இன்னும் தேதியை ஒதுக்காமல் இருப்பது தான் படப்பிடிப்புக்கு தாமதம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த படம் மிக பெரிய தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய் சேதுபதியால் மேலும் தாமதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதனை அடுத்து இந்த ஆண்டுக்குள் 'விடுதலை 2’ படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சூரி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய இந்த இந்த படம் முதல் பாகம் போகவே இரண்டாம் பாகமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan