Paristamil Navigation Paristamil advert login

சூரியனில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் - படமெடுத்து அனுப்பிய ஆதித்யா - L1

சூரியனில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் - படமெடுத்து அனுப்பிய ஆதித்யா - L1

15 வைகாசி 2024 புதன் 06:37 | பார்வைகள் : 282


ஆதித்யா எல்-1 (Aditya-L1) விண்கலமானது சூரிய வெடிப்பை படமெடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ (ISRO) தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.  

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.  

ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தார்கள்.  

அதன்படி, ஆதித்யா எல்1 கடந்த 4 மாதங்களுக்கு முன் அதன் இறுதி இலக்கை அடைந்தது. 

இந்நிலையில் சூரியனில் கடந்த 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் சூரியனில் ஏற்பட்டிருந்த வெடிப்பை படமெடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

கடந்த 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட இதே பகுதியில் ஏற்பட்ட சூரிய புயலின் காரணமாக வழிகாட்டு அமைப்பான I.P.S  சேவை மற்றும் பல செயற்கைக்கோள் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த முறையும் அதே இடத்தில் புயல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியா சார்பில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பதா என்று சோதனை நடத்தப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

மேலும் 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த சூரியகாந்த புயல் இதுவாகும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்