இஸ்ரேலிய ராணுவ தளத்தில் தீ விபத்து...!
15 வைகாசி 2024 புதன் 06:33 | பார்வைகள் : 9561
இஸ்ரேலிய, ரமாத் கானில் உள்ள டெல் ஹாஷோமர் ராணுவ தளத்தில் உள்ள கிடங்கு வளாகத்தில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
குறித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
28 தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் கூறுகின்றன.
தீக்கு இரையான கிடங்குகள் பல்வேறு உபகரணங்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்பட்டன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan