அவுஸ்திரேலியாவில் வேலை தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்ட இலங்கையர்கள்

14 வைகாசி 2024 செவ்வாய் 12:11 | பார்வைகள் : 4629
அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த நபரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலங்கையின் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அவுஸ்திரேலியாவில் தொழில் வழங்கும் வேலைத்திட்டம் உள்ளதாகக் கூறி பண மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது .
அத்துடன் பொல்ஹாவெல பிரதேசத்தைச் சேர்ந்த மூவரிடமிருந்து மூன்றரை இலட்சம் ரூபா தொடக்கம் 9 இலட்சம் ரூபா வரை பணம் பெற்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர் .
இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் , அவர் வேறு ஒருவரின் உதவியுடன் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதன்படி, அந்த நபரைக் கைது செய்ய விசாரணை நடத்தி வருகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று செவ்வாய்க்கிழமை (14) பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, ஒரு முறைப்பாட்டுக்கு 5 இலட்சம் பெறுமதியான 2 சரீர பிணையில் அவரை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் .
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025