
14 வைகாசி 2024 செவ்வாய் 10:42 | பார்வைகள் : 10706
அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
அமெரிக்காவின் அலபாமாவில் ஸ்டாக்டனில் உள்ள தனியார் மண்டபத்தில் மே தினத்தின் ஒரு பகுதியாக சிறப்பு விருந்தின் போது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அந்தநாட்டு செய்திகளில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
வாக்குவாதம்
குறித்த நிகழ்விற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு சென்றிருந்தனர்.
அப்போது, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கியை எடுத்து துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
இதனால், அங்கிருந்த மக்கள் பீதியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய 18 பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொலிசார் வழக்கு பதிவு செய்ய தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025