ரொறன்ரோவில் அதிகரிக்கப்படும் ஆட்கடத்தல் குற்றச்சாட்டு
14 வைகாசி 2024 செவ்வாய் 09:42 | பார்வைகள் : 11213
ரொறன்ரோவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒஷாவாவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டர்ஹம் பிராந்திய பொலிஸ் சேவை அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
ரொறன்ரோவைச் சேர்ந்த 35 வயதான கொன்ரோட் வெப்லி என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகவும் கடத்தப்பட்டவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி லாபமீட்டியதாகவும் குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெற்றால் அது குறித்து அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan